Please wait ...

ஊனமற்ற சுதந்திரம்

  • Category : Art
User Rating

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக அமைந்த பிரம்மாண்டமான தேக்கால் ஆன கட்டமைப்புடன் அமைந்த மருத்துவனையில் சரியாக பொங்கல் பொங்கும் தருணத்தில் சுதாகரன் - நீலா தம்பதிகளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பொங்கல் பொங்கும் தருணத்தில் பிறந்த குழந்தை இனிமையை வாரி வழங்கும் பிள்ளையாக அமைய வேண்டும் என்பதால் குழந்தை பெண்ணாக இருந்தால் இனியா என்றும், ஆணாக இருப்பின் இனியன் என்று வைக்கலாம் என வயதில் மூத்தோர்கள் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் நீலா பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.சுதாகரனோ தன் மனைவிக்கும் பிள்ளைக்கும் எந்த வித‌ பாதிப்பும் இல்லாமல் இருக்க‌ வேண்டும் என்ற எண்ணத்துடன் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தான்.அனைவரின் அருளாலும் பிரசவம் நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் குழந்தையை செவிலியர்கள் சுத்தம் செய்ய எடுத்துச் சென்றனர். நீலா வலியின் வேதனையில் துடித்தவாறு மயங்கிய நிலையில் படுத்திருந்தால். மருத்துவச்சி ஒருவர் தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர் என்றவுடன் சுதாகரனுக்கும் அவன் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்களின் முகம் அந்த வெண்ணிலவின் ஒளியையும் குளிர்ச்சியையும் தந்தது போல இருந்தது.
 ஆனால்....

என்று இழுத்தார், மருத்துவச்சி. என்னவென்று பதறிய நிலையில் அனைவரின் உள்ளமும் படபடத்தது.என்னவென்று அனைவரும் கேட்க, அவர் கூறினார். அந்தக் குழந்தைக்கு டர்னர் நோய்க் குறிப்புகள் உள்ளன என்று. இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை முகத்திலிருந்த புன்னகைக் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது.

பின் அவர்கள் விரிவாக கேட்க, அந்த மருத்துவச்சி அனைத்தையும் எடுத்துரைக்க ஆரம்பித்தாள். என்னவென்றால், அந்தக் குழந்தை ஒரு திருநங்கையாகவும், உடல் ஊனத்துடனும் அதாவது உடல் வளர்ச்சியற்று, கைக் கால்கள் வீக்கம் கொண்டும், எலும்புகளின் வளர்ச்சியில்லாமலும் பிறந்திருப்பதாகக் கூறினாள். மேலும் இந்தக் குழந்தையின் இரண்டாம் கட்ட வளர்ச்சியின்‌ போது தான் பல வகையான மாற்றங்கள் உடலில் உருவாகும் என்று கூறிவிட்டுச் சென்றாள்.
ஒன்றும் புரியாத புதிராக இருக்க, அவர்களின் நிலை பூவில் இருக்கும் தேனை உறிஞ்சி எடுத்தப் பட்டாம்பூச்சியைப் போல ஆனது. மகிழ்ச்சி என்னும் தேன் குடிக்கப்பட்டது என்றும் சுதாகரனை ஏளனமாகப் பேசியும், சிரித்தும் சென்றனர் உறவினர்கள் அனைவரும்.என்ன செய்வதென்று புரியாமல் நின்ற சுதாகரனையும் அவன் பெற்றோரையும் மருத்துவர் ஒருவர் அழைத்தார். அந்த மருத்துவர் தான் நீலாவை கருவுற்றிருந்த பொழுது பரிசோதித்தவர். உங்கள் குழந்தையை இப்பொழுது தான் பரிசோதித்து விட்டு வந்தேன்.

உங்கள் குழந்தை உடலளவில் வேண்டுமானல் ஊனமுற்றிருக்கலாம், ஆனால் மனதளவில் மிகவும் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறான் என்று கூறுகிறார். இதனையெல்லாம் கேட்ட சுதாகரனுக்கு கேட்க நன்றாகத் தான் உள்ளது ஆனால் இப்படி குறைப்பாடு உள்ள குழந்தையை யார் வளர்ப்பது? என்று கோபத்தில் ஏளனமாகக் கத்திவிட்டு வெளியேச் சென்றான். ஆனால் அவன் பெற்றோர் மிகவும் பொறுமையும் அன்பும் கலந்தவர்கள்.

ஆகையால் அவர்களால் இந்தச் சூழ்நிலையை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகையால் மருத்துவரிடம் இதனை எவ்வாறு குணப்படுத்துவது என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.அவ்வேளையில் நீலாவும் மயக்கம் கலைந்து எழுந்தாள். அவளின் அருகே குழந்தை படுத்த நிலையில் அழுதுக் கொண்டிருந்தது. அவளுக்கும் குழந்தையைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது.நீலா குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அருகே உட்கார்ந்திருந்த ‌மாமியாரையும் மாமனாரையும் அவளின் கண்கள் சற்றும் பார்க்கவில்லை குழந்தையை மட்டுமே நோக்கியிருந்தது. அவளின் பார்வையில் சிறிதும் உயிரில்லை.

சில மணித்துளிகள் கழிந்தது, ஒரு சத்தம் கேட்டது அன்பும் ஏக்கமும் கலந்த அக்குரல் அந்த மழலையின் அழுகுரல் தான். குழந்தையின் உடலில் சற்று கிரக்கம் தெரிந்ததால் யாரையும் தொட வேண்டும் என்று மருத்துவச்சி சொல்லிச் சென்றிருந்ததால் யாரும் தொடவில்லை. குழந்தை அழுதால் தன்னை அமைக்குமாறு கூறியிருந்தார். ஆகையால் நீலாவின் மாமனார் அழைக்கச் சென்றார். இதில் சற்றும் நாட்டமில்லாததால் சுதாகரன் தன் வீட்டிற்குச் சென்று விட்டான். கதவை இருக பூட்டிக்கொண்டு தொலைப்பேசியை செயலிழக்கச் செய்து படுத்துவிட்டான்‌. நீலாவுக்கும் வலியில் என்ன செய்வதென்று தெரியாமல்

துன்பத்துடன் படுத்துக் கிடந்தாள். மருத்துவச்சியை அழைத்து வந்தார் மாமனார் கண்ணன்.குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால் மருத்துவச்சி நீலாவை எழுப்பினார்‌.நீலாவும் மயக்கம் கலைந்து எழுந்தாள். மருத்துவச்சியின் உதவியால் குழந்தைக்கு பால் கொடுத்தாள். ஆனால் அவளுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை. அவள் அத்தை நீலாம்பரி மீது கொண்ட மரியாதைக்காக மட்டுமே இதனையெல்லாம் செய்து வந்தாள். இதனை கவனித்து வந்த மருத்துவச்சி மரியாதை செலுத்துவதைக் காட்டிலும் அன்பு கொண்டு அரவணைப்பது என்பது மிகவும் கடினம்தான் என்றார்.

இது எதையும் உணரும் பக்குவம் உனக்கில்லை. ஆனால் இன்று நீ செய்யும் செயல் நாளை பயன் என்னும் பெரிய பரிசாக வரும் என்பதை மட்டும் மறந்துவிடாதே என்று அறிவுரை வழங்கினார். யோசனையிலே மிதந்து கொண்டிருந்தாள் நீலா. குழப்பத்திலேயே தன் குழந்தையின் பசியைத் தீர்த்தாள். ஒரு பறவை தன் பசியைப் போக்கிக் கொள்ள அவசரமாக உண்டதே தவிர உணவின் சுவையையும் அதில் கலந்த அன்பையும் அனுபவிக்காதது போல தான்‌ நீலா குழந்தைக்குப் பாலூட்டினாள்.பின்னர் கண்ணன் மற்றும் நீலாம்பரியின் அறிவுரைப்படி அந்தக் குழந்தையைப் பராமரிக்கச் செய்தாள். அறிவுரை யாதெனில் இறைவன் சிவன்

மற்றும் சக்தியின் அம்சங்கள் பொருந்திய குழந்தை இது. தனித்துவம் என்பது இறைவனின் கருத்தல்ல, மனிதனுடையது. இவ்வாறு இழிவு செய்யும் மனிதர்களை விடுத்து இந்த அருளின் அம்சங்களைப் போற்ற வேண்டும் என்றெல்லாம் அறிவுரை வழங்கினார்கள் அத்தையும் மாமாவும்.இவர்களின் எண்ணங்களை மதித்து நடக்க ஆரம்பித்தாள் நீலா. ஆகையால் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணத் தொடங்கினர். மருத்துவமனையிலேயே இரண்டு நாட்கள் இருக்குமாறு மருத்துவரும் சொல்லிச் சென்றார். அதனால்

அத்தையும் மாமாவும் அவ்வப்போது மாறி மாறி வீட்டிற்குச் சென்று தேவையானவற்றை எடுத்தும் வைத்தும் வந்தனர்‌. நீலாவின் பெற்றோர்கள் விபத்தில் உயிரிழந்தார்கள் என்பதால் வேறு யாரும் துணையில்லை இவர்களைத் தவிர. சுதாகரனின் துணையும் இல்லாமல் நீலா மிகவும் வருத்தம் கொள்கிறாள். பெற்றோர்களும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் திரிந்தான் சுதாகரன். என்ன செய்வதென்று தெரியாமல் துன்பத்துடனும் அதே சமயம் அந்த மழலையின் சிரிப்பில் மயங்கி மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர்.

இரண்டு நாட்களுக்கு தேவையான சத்துக்கள் மிகுந்த உணவை முறையாக செய்து நீலாம்பரி வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அவள் கணவரிடம் கொடுத்துவிடுவாள். மேலும் குழந்தைக்கு எப்போது என்ன செய்ய வேண்டுமென்று அனைத்தையும் மிகுந்த நோக்கத்துடன் செய்வாள். எத்தனை முறை நடந்தாலும் சளைக்காமல் சிரித்த முகத்துடன் இருப்பார். உறவினர்கள் அனைவரும் தூற்றினாலும் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருப்பார்கள் அவ்வளவு உயர்ந்த உள்ளம் இருவருக்கும் ஆனால் அதில் சிறிது கூட சுதாகரனிற்கு இல்லாமல் போனது. ஆகையால் தன் பெற்றோரை எப்பொழுதும் திட்டிக்கொண்டே இருப்பான். அதையெல்லாம் துளியாகக் கூட மதிக்க மாட்டார்கள். நல்ல எண்ணம் கொண்ட இவர்கள் இல்லாவிட்டால் இந்த குழந்தையின் நிலையை கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்க முடியவில்லை. இதற்குத்தான் வீட்டிற்கு இரண்டு பெரியவர்கள் வேண்டும் என்பார்கள் போலும்.


இப்படியே இரண்டு தினங்கள் கழிந்தது.அன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாள், கட்ட வேண்டிய பணத்தை கட்டி ரசிதையும் பெற்றனர். பின் ஒரு மாதத்திற்கான மருந்துகளையும், பலசரக்குக் கடைகளில் உளுந்து, பருப்பு போன்ற சில முக்கியமான சத்துக்கள் மிகுந்த பொருட்களையும், மேலும் காய் கனி மார்ட்டிற்குச் சென்று சில பழங்களையும், காய்கறிகளையும் அதாவது வெங்காயம், தக்காளி, பூண்டு, கரிவேப்பில்லை போன்றவற்றையும் தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வாங்கி வீடு திரும்பினார் கண்ணன். நீலாவும் நீலாம்பரியும் வாடகை மகிழுந்தில் வந்து சேர்ந்தனர். 


வந்து இறங்கிய பின் தான் தெரிந்தது சுதாகரன் வீட்டில் இல்லை என்று. அவன் வேலைக்குச் சென்று விட்டதாக பக்கத்து வீட்டு கவிதா கூறினாள். கவிதா குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்தில் ஓடி வந்தாள். அவளும் முன்பே அறிந்திருந்தாள் குழந்தையைப் பற்றி அவளுக்கு உடல்நலமில்லாததால் மருத்துவமனைக்கு தான் வர இயலவில்லை என்று கூறினாள். கவிதாவின் கணவரும் குழந்தையைப் பார்க்க வேகமாக வந்து பார்த்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் கூட நல்ல மனம் கொண்டவர்கள் தான். ஆனால் இவர்கள் தெருவிலிருக்கும் மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் இவர்களை பார்த்து ஏளனமாக சிரிக்கத்

தொடங்கினர்.மனம் சுருங்க ஆரம்பித்தது நீலாவிற்கு. அதனைக் கண்ட நீலாம்பரி இதனையெல்லாம் கேட்டு உன் நேரத்தை வீணடிக்காதே உள்ளே சென்று இளைப்பாறு என்றாள்‌. அதற்கு முன் சற்று நில் என்று சொல்லி உள்ளே விரைந்து சென்றாள் நீலாம்பரி. எந்த திருஷ்டியும் பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆரத்தி தட்டை வைத்து மூன்று முறை சுற்றி ஆசிர்வதித்தார்கள் கவிதா, கிருஷ்ணமூர்த்தி, நீலாம்பரி, கண்ணன்.புன்னகை பூத்த முகத்துடன் குழந்தையுடன் அனைவரும் உள்ளே நுழைந்தனர்‌.மருத்துவமனையிலிருந்து வருவதால் அனைவரும் தங்களை சுத்தம் செய்யத் தொடங்கினார்கள்.

ஆகையால் கவிதா மற்றும் கிருஷ்ணமூர்த்தி தங்கள் வீட்டிற்கு வந்தார்கள். மேலும் குழந்தைக்கு எந்த வித‌ பாதிப்பும் ஏற்படாக்கூடாது என்பதற்காகவும் தான். நீலா தன்னை பக்குவம் படுத்திக் கொண்டாள் அதுவரை அத்தை நீலாம்பரி குழந்தையைப் பராமரித்து வந்தாள். பின்னர் குழந்தையும் உறங்கியது ஆகையால் அவர்கள் குழந்தைக்காக ஏற்பாடு செய்த அழகிய நிறத்தையுடைய மற்றும் பூவாலான மெத்தை போன்ற இதமான சேலையால் ஆனதாகும். 
அதில் குழந்தையை மெல்லமாக தூக்கிப் படுக்க வைத்தாள், நீலா‌. குழந்தையும் நன்றாக உறங்கத் தொடங்கியது. திடீரென கவிதா இரண்டு பாத்திரத்துடன் வந்தாள், என்னவென்றால் நீலாவிற்காக திருக்கை மீன் குழம்பு வைத்ததாகக் கூறி அவளிடம் அதனைக் கொடுத்தாள். இன்னொரு பாத்திரத்தில் அனைவருக்காகவும் சத்து உருண்டை பிடித்ததாகக் கூறி நீலாம்பரியிடம் கொடுத்தாள். எதற்கு இவ்வளவு சிரமப்படுகிறாய் என்றார் கண்ணன். சிரமம் இல்லை உங்களுக்கும் உதவுவதற்கு ஆல் இல்லை. எனக்கோ அன்பு செலுத்துவதற்கு உரிய ஆல் இல்லை உங்கள் குடும்பத்தைத் தவிர என்றாள். மனதைத் தொட்ட கவிதாவின் வார்த்தைகளை எண்ணி அனைவரும் மகிழ்ச்சியில் மௌனம் காத்தனர்‌.அவளும் வீட்டில் வேளை இருப்பதாகக் கூறிச் சென்றாள். 
 சுதாகரன் வேளை செய்யும் இடத்தில் மிகவும் கோபத்துடனும் மௌனமாகவும் இருந்தான். யாரிடமும் முகம் கொடுத்தும் பேசவில்லை. வீட்டிற்கு இவர்கள் வந்தவுடன் தன் கோபத்தை வெள்ளம் போல கொட்டக் காத்துக் கிடந்தான்.சுதாகரனின் நெருங்கிய நண்பர் ஒருவர் தான், மகிழுந்து பழுது பார்க்கும் நிறுவனத்தில் சேர்த்துவிட்டார் காரணம் பழைய இடத்தில் குழந்தையைப் பற்றிக் கேட்டுத் தொந்தரவு செய்வர் என்று.

அவன் குடும்பத்தார் வீட்டிற்கு வந்துவிட்டனர் இன்னும் அவர்களைப் பார்க்க செல்லவில்லையா என்று கேட்டு கேலி செய்து விளையாடிக் கொண்டிருந்தான்‌. அவனுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறிய நிலையில், அவனிடம் உன் வேளையை மட்டும் பார்த்தால் போதும் என்று கத்திக் கொண்டிருந்தான். இவனும் கொஞ்சம் கூட அவனை மதிக்காமல் சிரித்துக் கொண்டே சென்றான். சுதாகரன் கொஞ்ச நேரம் அப்படியே யோசனை எண்ணும் தீயில் எரிந்து கொண்டிருந்தான். என்ன யோசித்தான் என்று தெரியவில்லை ஆனால் சட்டென்று எழுந்து வீட்டிற்குப் புறப்பட்டான். அப்பொழுது மணி காலை பதினொன்று, திடீரென வேளையின் இடையில் விரைந்து செல்வதைப் பார்த்த அனைவரும் விசித்திரமாக பார்த்தனர். முதலாளியிடம் கூட சொல்லாமல் சென்றுவிட்டான். 
அவன் வேளை செய்யும் இடத்திற்கும் வீட்டிற்கும் 5 கிலோமீட்டர்கள். இருப்பின் கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நடந்தே வீட்டிற்கு வந்தான். அப்படி பார்த்தால் ஒரு மணி நேரமாவது ஆகும் ஆனால் அவன் அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தான். அவன் நடந்து வந்த பாதையை சிறிதும் கவனிக்கவில்லை ஆகையால் அவனை பலரும் திட்டிக் கொண்டே சென்றனர்‌. வீட்டிற்கு வந்த‌ அவன் தன் காலணிகளை பறக்கவிட்டு உள்ளே வந்த வேகத்தில் குழந்தை சினுங்கத் தொடங்கியது. இருப்பினும் தொடர்ந்து சத்தத்தை உருவாக்கிக் கொண்டே உள்ளே வந்தவனை, யார் குழந்தையைத் தொந்தரவு செய்வதென்று கேட்டுக் கொண்டே வந்தார் கண்ணன். உறங்கிக் கொண்டிருந்த நீலாம்பரியும் நீலாவும் மெல்ல எழுந்து‌ வந்தனர். மூவருக்கும் இவனை பார்த்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சி, அவன் கோபம் அவர்களுக்குத் தெரியவில்லை.
அதனை அறியாத நீலாம்பரி கண்ணா, அதிக வேளை செய்ததால் மிகவும் சோர்வாக இருக்கின்றதா! கை கால்களை கழுவி விட்டு இங்கே உட்கார், நான் சாப்பிடுவதற்கு ஏதாவது எடுத்து வருகிறேன் என்று பேசிக்கொண்டே அவன் அருகில் வருகிறாள் நீலாம்பரி. தாயின் பாசத்தையும் அவரின் மனப் பக்குவத்தையும் அறியாமல் பேசத் தொடங்கினான்‌ சுதாகரன்.
 எனக்கு இதிலெல்லாம் சற்றும் விருப்பமில்லை, ஆகையால் இந்த குழந்தையை எங்காவது சென்று கொடுத்து விடுங்கள் இல்லையேல் கொன்று விடுங்கள் என்றான். இவன் கத்தியதில் மிரண்டு அழத்தொடங்கியது குழந்தை. 
விரைந்து அந்தத் தொட்டியின்‌ அருகில் சென்று அந்த குழந்தையைப் பார்த்து, ஏன் உன்‌ உருவம் இப்படி இருக்கின்றது? என்றான். மேலும் உனக்கு நான் சொல்வது‌ புரியாமல் போகலாம் ஆனால் மற்றவர்களுக்கு புரியும். உன்னை பார்க்கவே என்னால் முடியவில்லை ஏன்‌ இவ்வாறு எனக்கு வந்து வாய்த்தாய்? என்று அவன் விருப்பத்திற்கேற்ப திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான். கண்ணன் தன் பொறுமையை இழந்து விரைந்து வந்து அவனை பலாரென்று அறைந்தார்.அனைவரும் மௌனம் காத்த அந்த நொடி குழந்தை பசியால்

கதரியது. இந்தக் குழந்தை என்னை விட முக்கியமாகியதா? என்று மேலும் மேலும் கத்திக் கொண்டே திட்டித் தீர்க்கிறான் அனைவரையும். கண்ணனோ சூரியனைப் பார்த்து நாய் குழைத்துக் கொண்டே தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே தொட்டியிலிருந்த குழந்தையைத் தூக்கி நீலாவிடம் கொடுத்து பசியைப் போக்கு மா என்றுக் கொடுத்தார். அவளுக்கும் என்ன நடக்குமோ‌? என்ற குழப்பத்துடன் உள்ளே சென்றாள். சுதாகரன் நீலாவை நில்! என்றான். என்னை விட உனக்கு அந்த குழந்தை முக்கியம் என்றால் செல் இல்லையென்றால் அந்த குழந்தையை உன்‌ கையாலே வெளியே வைத்து விட்டு வந்து விடு என்றான். என்னுடைய அன்பில் எப்பொழுதும் நான் பாரபட்சம் காட்டியதில்லை இது உங்களுக்கே நன்றாகத் தெரியும் தானே, பின்னர் ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறீர்கள் என்றாள். சபாஷ்! என்றார் கண்ணன். அவனுக்கு அறிவு இருந்திருந்தால் ஏன் இப்படி பேசியிருக்கப் போகிறான் நீ போ மா, என்றாள் நீலாம்பரி. சுதாகரனுக்கு ஒன்றும் புரியவில்லை ஆகையால் விரைந்து சென்று நீலாவிடமிருந்து குழந்தையைப் பறிக்கப் பார்த்தான்.கண்ணனும்

நீலாம்பரியும் குழந்தையைக் காப்பாற்ற சுதாகரனை‌க் கீழே தள்ளி விட்டனர். இறுதியில் மாமனார் கண்ணன் ஒரு முடிவு எடுத்தார். குழந்தை இருப்பது தானே உனக்கு பிரச்சனை, என்றார் அவனிடம். அவனும் ஆம்! என்று கோபத்துடன் கூறினான். நீலாவிடம் குழந்தையைக் கொடுத்து வாயிலில் வைத்து விட்டு வா என்றார். அவளுக்கு சிறிதும் மனமில்லாமல் மாமா என்ன சொல்லுகிறீர்கள்? என்றாள் பதட்டத்துடன். நீலாம்பரிக்கு ஏன் கண்ணன் இப்படி சொல்கிறார் என்று புரிந்துகொண்டாள். ஆகையால் அவளும் குழந்தையை வைத்து விட்டு வா என்றாள்.பின்னர் தான் புரிந்தது நீலாவிற்கும் ஆகையால் அவள் குழந்தையை வைத்துவிட்டு வெற்றி உனக்கே, இவ்வுலகில் மனிதனின் கடமை என்னவென்று நீ அனைவருக்கும் புரியவைப்பாய், இன்று உன்னை வெறுப்பவர்கள் ஒரு நாள் உன் பாதம் அடைவர் என்று சொல்லி வந்தாள் நம்பிக்கையுடன்.குழந்தையோ பசியில் துடிக்கின்றது ஆனால் சுதாகரனோ கல்லிச் செடியின் முற்களை போல மனதை பிடிவாதமாக வைத்திருந்தான்.பின் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை வேகமாக கதைவைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு உள்ளே தன்‌ அறையில் வந்துப் படுத்தான். அதனைப் பார்த்த கண்ணன், உடனே பக்கத்து வீட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் முதலில்

குழந்தையைத் தூக்கிச் செல்லுங்கள் நடந்ததை அப்புறம் சொல்கிறேன் என்றார். அவரும் சுதாகரனுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதால் பூனையைப்‌ போல் பதுங்கி வந்து குழந்தையைத் தூக்கிச் சென்றார். அதனைப் பார்த்த கண்ணனுக்கு ஒருபுறம் பாலைவனத்தில் பூத்த ரோஜா செடியைப் போன்றிருந்தது மறுபுறம் வானில் உலா வரும் பறவையைப் போல மலர்ந்திருந்தார். நீலாவிற்கு பிரிவு என்பது புதியதல்ல ஆனாலும் அவள் மனம் பாதியாக உடைந்தது. சோகத்தில் மூழ்கிய அவள் மயங்கிய நிலையில் மெல்லமாக சாய்ந்தாள், நீலாம்பரி பிடித்தாள். ஒன்றும் ஆகாது என்று சொல்லி மனதை திடப்படுத்திக்கொள் மகளே! என்றுக் கூறி தண்ணீரைக் கொடுத்து படுக்கையில் படுக்க வைத்தாள் நீலா‌ம்பரி. 
இருவரும் இணைந்து பல வகையான ஆதரவுகளையும் சத்துக்கள் மிகுந்த உணவுகள் பலவற்றையும் கொடுத்துப் பார்த்துக் கொண்டனர்.
சுதாகரனும் மதியம் 2 மணிக்கு எழுந்து வந்தான். பசி எடுத்ததால் சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்த்தால் அனைவரும் படுத்திருந்தனர். சரியென்று கதவை திறந்து வெளியே சென்றான் குழந்தையைக் காணாமல் அதிர்ந்து போனான். அந்நேரம் பார்த்து நீலாம்பரியும் எழுந்து வந்தாள் ஆகையால் அவனுக்கு சாப்பாடு போட்டு அருகில் அமர்ந்தாள். குழந்தையைப் பற்றி அவளிடம் கேட்டான் தெரியவில்லை என்று மழுப்பிவிட்டாள் நீலாம்பரி. சரி என்று கண்டுக் கொள்ளாத படி அவன் சென்றான், கைகளைத் தூய்மைப் படுத்திக் கொண்டு வெளியே செல்வதாகக் கூறிச் சென்றான். கண்ணனும் எழுந்து நீலாவையும் எழுப்பி மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர். 
சாப்பிட்டு முடித்து விட்டு கிருஷ்ணமூர்த்திக்கு தொலைப்பேசி மூலம் அழைத்தார். நடந்ததைக் கூறி தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினார். அவரும் கவிதா விடம் இந்தத் திட்டங்களைக் கூறிச் சென்று வருகிறேன் என்று துணைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். அவளும் வழியனுப்பி வைத்தாள். 

குழந்தையைத் தூக்கிக் கொண்டு விரைந்து சென்றார் சிங்கப்பூரின் ஒரு பகுதிக்கு. குழந்தையைத் தன் மனைவியின் பெரியப்பா பாபுவிடம் ஒப்படைத்து வந்தார். பாபுவிற்கு கண்ணன் அனைத்தையும் சொல்லி எடுத்துரைத்தார். அதனைப் புரிந்து கொண்டு ஒப்புக் கொண்டார்.ஆகையால் பாபுவும் அவர் மனைவி விணையாவும் சேர்ந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர்களின் மொத்தப் பாசத்தையும் ஊட்டி வளர்த்தனர்‌. குழந்தையைப் பெற்றவர்களும் வளர்த்தவர்களும் நல்ல குணம் படைத்தவர்கள் ஆகையால் குழந்தை வீரா நற்குணம் படைத்தவனாக இருந்து வளர்ந்தான். முதல் 3 வயது வரை வீட்டிலேயே வைத்து ஆரம்பக் கல்வி கற்றுக்கொண்டான். பின்னர் தனது மூன்றரை வயதில் பள்ளியில் சேர்த்தனர்.பள்ளி முதல்வரிடம் அழைத்துச் சென்று அனைத்தையும் கூறி அவனது அடையாள அட்டையில் ஆண் என்றே குறித்து விடுங்கள் என்றும் வீராவிடம் சில நம்பிக்கை தரும்

வார்த்தைகளைச் சொல்லியும் திரும்பினார். அவனும் அதற்கேற்றவாறு நடந்து கொண்டான். அவனை ஆரம்பத்தில் கேலி கிண்டல் செய்து வந்தாலும் போகப் போக அவனின் அன்பு கொண்டு அனைவரையும் நண்பர்களாக மாற்றினான்‌. இதனை அறிந்த பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கூட அவனைப் பாராட்டி வந்தனர். ஆண்டுகள் பல கழிந்தது, போட்டிகளில் வெற்றி பெற்றும் படிப்பில் முதலிடம் பெற்றும் பரிசு பல குவித்தான்.இவ்வாறே அனைவரிடமும் அன்பு என்னும் சொத்தைப் பெற்றுக் கொண்டான். மேலும் அவன் எல்லையில்லா ஆனந்தத்துடனும் வாழ்ந்து வந்தான். இவ்வாறே காலம் பல கழிந்தன, அவன் 10 ஆம் வகுப்பு தேர்வில் 485/500 மதிப்பெண்களை பெற்று பள்ளியிலேயே மூன்றாம் இடத்தைப் பெற்றான்.

அன்று பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. இவன் வாங்கிய மதிப்பெண்களை தாய் நீலா அறிந்துக் கொண்டு மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருந்தாள். நண்பர்களுடன் அவ்வளவு மகிழ்ச்சியாக அந்த கல்விஆண்டை முடித்து வீடு திரும்பினான். விடுமுறை தினத்தில் விளையாட்டு, தேவையான மற்ற கலைகள் (தட்டெழுத்து, கைத் தொழில்கள்)போன்றவற்றில் தேர்ச்சி பெற்றான்.அதேப் பள்ளியிலே பண்ணிரண்டாம் வகுப்பும் படித்து 505/600 எடுத்தான். விடுமுறை தினங்களில் பாபுவின் உணவகத்தில் வேளை செய்து வீராவுக்கு அதற்கான சிறு தொகையையும் கொடுப்பார். அதனை சேகரித்து வைத்துக் கொள்வான் வீரா.

இவ்வாறே 2 மாதம் செய்து 4000 சம்பாதித்து வந்தான். இதற்கிடையில் இவனை கல்லூரிக்கு அனுப்பும் பணியும் நடந்துக் கொண்டே இருந்தது. இறுதியில் சிங்கப்பூர் கலை ஆற்றல் கல்லூரியில் சேர்த்துவிட்டார். பள்ளியில் கிடைத்த முதல்வரை போல இவரும் நல்ல மனம் கொண்டவராக தான் இருந்தார். ஆனால் பள்ளியில் கிடைத்த நண்பர்கள் போல தான் கிடைக்கவில்லை.அவர்கள் எதற்கெடுத்தாலும் வீரா வின் தோற்றத்தையும்‌ இயல்பையும் தவறாகப் பேசிக் கொண்டு இருப்பதையே‌ தன் வேளையாக வைத்திருந்தனர். வீராவின் நற்குணம் அறிந்த ஆசிரியர்கள் மற்றும் முதல்வர் இவனின் நிலையறிந்து சமாதானம் கூறுவார்கள். மற்ற மாணவர்களுக்கு எவ்வளவு வாய்ப்பு கிடைத்தாலும் இதே தவறை மறுபடி மறுபடி செய்து வந்தனர்‌.

யாருக்கும் மாணவர்களை எவ்வாறு கட்டுக்குள் வைப்பது என்று புரியவில்லை, இரு மாணவர்களை இடைநீக்கம் செய்தும் ஐந்து மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்தும் பார்த்தனர். மற்றவர்கள் திருந்துவதாக இல்லை. ஆனால் இதற்கெல்லாம் வீரா மதிப்புக் கொடுக்கவில்லை, அவன் தன் வேளையில் மட்டுமே நல்ல கவனம் செலுத்தி வந்தான்.அவ்வப்போது மட்டும் சில வருத்தங்கள் அவனுக்கு ஏனெனில் அவனும் மனிதன் தானே உணர்வுகள் இருக்கின்றதல்லவா! 
இவ்வாறு பல கடுமையான நடவடிக்கைகளையும் கடந்து தன் வெற்றிப் பாதையை அடைந்தான். பெற்றோருக்கும் வளர்த்தாருக்கும் அப்படி பெருமை சேர்த்தான் தன் கல்லூரி நாட்களில். மற்ற மாணவர்கள் பல‌ வேலைகளை செய்து தடுத்தாலும் வெற்றி இவனுக்குத் தான் என்பது கடவுளின் முடிவு யாரால் மாற்ற முடியும்? இறுதியில் கல்லூரிப் படிப்பையும் முடித்து பட்டமும் பெற்றான். அடுத்ததாக அவனுக்கு படிக்க வேண்டாம் என்று தோன்றியதால் வீட்டில் பாபு மற்றும்‌ விணையாவிடம் சொல்லி வெளி உலகை கண்டு

மகிழ்ச்சிப் பெற போவதாகக் கூறினான். இவர்களும் முடிவை மதித்து நடந்து வந்தனர். நீலாவுக்கும் இதில் எந்த வித வருத்தமும் இல்லை. அவளின் வார்த்தைகள் நிறைவேற்றப் போவதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தாள். 
வீரா வின் திட்டம் "கனவுகளை நிறைவேற்றுவதற்காகத் தான் மனிதனின் பிறப்பே!" ஆகையால் தான் அவன் இவ்வாறு முடிவு எடுத்தான். சிறு வயதிலிருந்து சேர்த்து வைத்த காசுகளை வைத்து வாழ்க்கையை வாழத் தொடங்கினான். தான் செல்லும் ஒவ்வொரு பாதையிலும் பல வகையான பிரச்சினைகளை தீர்த்து வைப்பான்‌. பிரச்சனை என்றால் மனித உரிமைகள், நிறம், சாதி, மதம், சொத்துப் பிரிவு, பெண் அடிமை, ஒற்றுமை, குழந்தைத் தொழிலாளர் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுப்பட்டு சுதந்திரத்தையும் அமைதியையும் மேம்படுத்திக் கொள்வது குறித்து பேசிப் பல மக்களைத் திருத்தி வந்தான். மேலும் தன் ஆசைகளையும் வளர்த்துக் கொண்டு அதனை‌ நடத்தி மகிழ்ச்சி அடைந்து வந்தான். அதில் ஒரு ஆசை தான், பொழியும் மழை பாதி உடலை நனைக்க சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் மீதி உடலை

நனைக்க வேண்டும் என்பதே. அந்த இன்பத்தையும் அடைந்தான் இந்தியாவின் வங்கப் பகுதியில். இவ்வாறு முழுமையாக பல நாடுகளைச் சுற்றி தன் ஆசைகளைத் தீர்த்துத் தன் பிறப்பின் அர்த்தமறிந்து அதில் வெற்றியும் அடைந்தான். அவன் தாயின் வார்த்தைகளையும் காப்பாற்றினான். அவனுடைய உடல் வேண்டுமானால் ஊனமுற்று இருக்கலாம், ஆனால் மனம் ஊனமற்று தான் இருக்கின்றது என்பதை உணர்த்தினான் சாதி, மதம், நிறம், குணம், ஏழை, அழகு, பெண், ஆண் என்று பாகுபாடு பார்க்கும் ஊனமுற்ற மக்கள் பலருக்கு. வீரா வீட்டிற்கு வந்ததும் தன் தாய் நீலாவைப் பற்றியும் அவள் வார்த்தைகளையும்‌

கூறினான் பாபு. மேலும் அவன் கடந்து வந்த பாதையைப் பிற்றியும் கூறினான். வீரா அனைத்தையும் அறிந்துக் கொள்ள பாபுவையும் விணையாவையும் கட்டி அனைத்துக் கொண்டான். தன்‌ தாய் நீலாவிடமும் தாத்தா பாட்டியிடமும் தொலைப்பேசியில் பேசி மகிழ்ந்தான்.இறுதியில் சிங்கப்பூரிலிருந்து வீரா உடன் பாபுவும் விணையாவும் வந்தனர்.வீரா தன் தந்தை சுதாகரனிடம் பேச தான் வந்தான். விமானத்தில் பயணம் செய்தனர் மூவரும். தாமதமானால் உணவு அருகிலிருக்கும் உணவகத்தில் நல்ல மணமுடைய நெய்யில்

வருத்த முந்திரி மற்றும் மிளகின் காரத்துடன் பொங்கலும், பெருஞ்சீரகப் பொடித் தூவிய சாம்பாரும் உண்டனர். நன்றாக உண்டு வீட்டை வந்தடைந்தனர். வீரா வின் வரவை எதிர்பாராத நீலா யாரென்று தெரியாமல் கேட்க பின்னாலிருந்து பாபுவும் விணையாவும் வர புரிந்துக் கொண்டாள்.இவர்கள் வந்த நேரம் சுதாகரனும் வீட்டிலிருக்க யாரென்று கேட்டான். பாபு விரைந்து முன் வந்து உங்கள் குழந்தை வீரா என்றான். உறைந்து நின்ற அவன்‌ இந்த முகத்தை எங்கையோ பார்த்திருக்கிறோமே? என்று யோசனை செய்து

கொண்டிருந்தான். அப்போது தான் புரிந்தது அவன் தொலைக் காட்சியில் சமூகம் சார்ந்த அறிவுரை வழங்கினார் என்று பாராட்டப்பட்டவன் என்று. அவனுக்கு நம்ப முடியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக கடந்த கால நினைவுகளை யோசித்து வெட்கித் தலை குணிந்தான் சுதாகரன். இதுவரை கண்ட வெற்றியெல்லாம் சுதாகரனின் நிலை அறிவுறுத்தியது. வாய்ச் சொல் கத்தியை விடக் கூர்மையானது என்று புரியவைத்தான். பின்னர் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து மகிழ்ந்தனர் அவர்களின் பொன்னான நேரத் துளிகளை. நேரம் கழிந்தது, வீராவை விட்டுவிட்டு பாபுவும் விணையாவும் புறப்பட்டனர். செல்ல வழியில்லாமல் வழி தேடிச் சென்றனர். அன்பு கொண்டவர்கள் இருக்கும் வரை அகிலம் போற்றப்படும். 
பாகுபாடுகளை நீக்கி, பக்குவமாக வாழுங்கள்! ????✨

Recent Reviews

No Reviews

Add Review

You can add Upto 250 Characters



Yes No



Recommended for you